search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் புத்தகங்கள் இருக்க வேண்டும், கற்கள் அல்ல: ராஜ்நாத் சிங்
    X

    காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் புத்தகங்கள் இருக்க வேண்டும், கற்கள் அல்ல: ராஜ்நாத் சிங்

    காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் புத்தகங்கள் இருக்க வேண்டுமே தவிர, கற்கள் அல்ல என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
    லக்னோ:

    காஷ்மீரில் பயங்கரவாத தளபதி பர்கான் வானியும், அவரது ஆதரவாளர்களும் கடந்த மாதம் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    இந்த வன்முறை மற்றும் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 60-க்கும் அதிகமானோர் பலியானார்கள். பலர் காயம் அடைந்து உள்ளனர்.

    இந்நிலையில், காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் புத்தகங்கள் இருக்க வேண்டுமே தவிர, கற்கள் அல்ல என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

    உத்திரபிரதேசம் மாநிலம் தலைநகரில் உள்ள லக்னோ பல்கைலைக் கழகத்தில் நடைபெற்ற சத்ரபதி சிவாஜி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

    காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் கைகளில் கற்கலுக்கு பதிலாக பேனாக்கள், புத்தகங்கள் மற்றும் கணினி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சிலர் தங்களுடைய சுயநல அரசியலுக்காக கஷ்மீர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கற்களை எடுக்க வைக்கிறார்கள். இது அவர்களுடைய எதிர்காலத்தில் விளையாடுவதாகும்.

    எந்த தந்தை தன் குழந்தைகளிடம் அல்லது இளைஞர்களிடம் படிப்பை கைவிட்டு கற்களை எடுக்குமாறு சொல்வார்?

    இந்த குழந்தைகள் அப்பாவிகள். இந்திய நாட்டின் குழந்தைகள். காஷ்மீரில் பிரச்சனை உள்ளது என்றால் அதனை ஆர்ப்பாட்டத்தின் வழியில் தீர்க்க முடியாது. காஷ்மீர் மாநில மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு பரஸ்பர கலந்துரையாடலே ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×