search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைதியான, உறுதியான, ஒருங்கிணைந்த நேபாளம் தான் இந்தியாவின் விருப்பம்: பிரணாப் முகர்ஜி
    X

    அமைதியான, உறுதியான, ஒருங்கிணைந்த நேபாளம் தான் இந்தியாவின் விருப்பம்: பிரணாப் முகர்ஜி

    அமைதியான, உறுதியான, ஒருங்கிணைந்த நேபாளம் தான் இந்தியாவின் விருப்பம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    தலைநகர் புதுடெல்லியில் நேபாள நாட்டின் துணை பிரதமரும், சிறப்பு தூதருமான பைமலேந்திரா நிதி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று முன் தினம் சந்தித்தார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

    இந்த சந்திப்பு தொடர்பாக ஜனாதிபதி மாளிகை சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், நேபாள துணை பிரதமருடனான சந்திப்பின் போது, நீண்ட கால அமைதி மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த ஒரு ஒருங்கிணைந்த நேபாளத்தையே இந்தியா விரும்புவதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்த நோக்கத்தை நிறைவேற்ற இந்தியா நேபாளத்துடன் இணைந்து செயல்படும் என்றும் அப்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.

    முன்னதாக நேபாள நாட்டின் துணை பிரதமர் பைமலேந்திரா நிதி வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×