search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த கருஞ்சிறுத்தை தாக்கி பழங்குடியினப் பெண் பலி
    X

    மும்பை அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த கருஞ்சிறுத்தை தாக்கி பழங்குடியினப் பெண் பலி

    மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கருஞ்சிறுத்தை தாக்கி பழங்குடியினப் பெண் பலியான தகவல் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    மும்பை:

    மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கருஞ்சிறுத்தை தாக்கி பழங்குடியினப் பெண் பலியான தகவல் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    தானே மாவட்டம், முர்பாட் தாலுக்காவில் உள்ள சிங்கப்பூர்-வாக்வாடி குடியிருப்பு பகுதிக்குள் நேற்று மாலை புகுந்த ஒரு கருஞ்சிறுத்தை, மிரா கன்டு என்ற 55 வயது பழங்குடியினப் பெண்ணை வீட்டில் இருந்து வெளியே இழுத்துவந்து கடித்துக் குதறிக் கொன்றது.

    அந்தப் பெண்ணின் கூச்சலை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்து வீட்டினர், சிறுத்தையை விரட்டியடித்தனர். தற்போது அதேபகுதியில் பதுங்கி இருக்கும் அந்த கருஞ்சிறுத்தையை பிடிக்க மாவட்ட வனத்துறையினரின் உதவியுடன் போலீசார் கூண்டுகளை அமைத்து காத்திருக்கின்றனர்.

    இச்சம்பவத்தால் சிங்கப்பூர்-வாக்வாடி குடியிருப்பு பகுதி மக்கள் பீதியில் உறைந்துப் போய் உள்ளனர்.
    Next Story
    ×