என் மலர்

  செய்திகள்

  இன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாள்: நினைவிடத்தில் ஜனாதிபதி, மன்மோகன் சிங், ராகுல் அஞ்சலி
  X

  இன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாள்: நினைவிடத்தில் ஜனாதிபதி, மன்மோகன் சிங், ராகுல் அஞ்சலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீரபூமியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
  புதுடெல்லி:

  கடந்த 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி, மே 21-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வந்தபோது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

  21-8-1944 அன்று பிறந்த ராஜிவ் காந்தியின் பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரசார் இன்று எழுச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீரபூமியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று காலை மலரஞ்சலி செலுத்தினர்.

  காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முன்னாள் மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் அவரது நினைவிடத்தில் மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
  Next Story
  ×