என் மலர்
செய்திகள்

பிரதமர் மோடி உலகின் நம்பர்-1 தலைவர்: அமித்ஷா சொல்கிறார்
பிரதமர் மோடி உலகின் நம்பர்-1 தலைவர் என்று டெல்லி பா.ஜனதா அலுவலக அடிக்கல் நாட்டு விழாவின்போது கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா கூறினார்.
புதுடெல்லி:
டெல்லி பா.ஜனதா அலுவலக அடிக்கல் நாட்டு விழாவில் கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா பேசியதாவது:-
பிரதமர் மோடியின் அரசு மக்களிடம் இருந்து தொடர்ந்து ஆதரவுகளை பெற்று வருகிறது. மக்கள் அவருடைய பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். இன்று அவர் உலகின் நம்பர்-1 தலைவராக உருவெடுத்து இருக்கிறார்.
மோடியின் செயல்பாடுகளால் கட்சி இன்று நல்ல நிலையில் உள்ளது. இதை தொண்டர்கள் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். மக்களுடைய எதிர்பார்ப்பு என்ன? என்பதை அறிந்து அதை நாம் செயல்படுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். மக்களுடைய ஆதரவு என்றும் நமக்கு இருக்கும்படி பார்த்துக் கொள்வது தொண்டர்களுடைய கடமையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story