என் மலர்

    செய்திகள்

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்: சந்திரசேகரராவ் மகள் பேட்டி
    X

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்: சந்திரசேகரராவ் மகள் பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என சந்திரசேகரராவ் மகளும், எம்.பி.யுமான கவிதா கூறியுள்ளார்.
    நகரி:

    ஆந்திர கிருஷ்ணா மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகளும், எம்.பி.யுமான கவிதா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில பிரிவினையின் போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக அறிவித்தனர். ஆனால் இப்போது தர மறுப்பது அநியாயம். இது ஆந்திர மக்களின் உரிமை. இதனால் மாநில சிறப்பு அந்தஸ்துக்கு ஆதரவு அளிக்கிறோம். வளர்ச்சிக்காகதான் மாநிலத்தை பிரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தெலுங்கு பேசும் மக்கள் அனைவரும் சகோதரர்களாகதான் பழகி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×