என் மலர்

  செய்திகள்

  தெலுங்கானாவில் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
  X

  தெலுங்கானாவில் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கானாவில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  நகரி:

  தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் கூக்குனூர் பள்ளி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராம கிருஷ்ண ரெட்டி.

  இவரது மனைவி தனலட்சுமி. 2 மகன்கள் உள்ளனர். நேற்று மாலை மனைவி, மகன்களை புஷ்கர விழாவிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்தார்.

  வீட்டில் தனியாக இருந்த அவர் நள்ளிரவில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

  போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, வீட்டில் ராமகிருஷ்ண ரெட்டி எழுதிய கடிதம் சிக்கியது.

  அதில் அவர் தன்னை லஞ்சம் வாங்குமாறு உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். பலரும் தன்னை லஞ்சம் வாங்க முடியாதவன் என்று கேலி செய்கிறார்கள். இதனால் நான் தற்கொலை செய்கிறேன் என்று எழுதி வைத்திருந்தார்.

  மேலும், தன்னை மிரட்டிய அதிகாரிகளின் பெயர்களையும் எழுதி வைத்து உள்ளார்.
  Next Story
  ×