என் மலர்

  செய்திகள்

  காஷ்மீரில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் ஆவேச தாக்குதல்: 3 பேர் பலி
  X

  காஷ்மீரில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் ஆவேச தாக்குதல்: 3 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் இரு ராணுவ வீரர்களூம், காவல்துறையை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர்.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் இரு ராணுவ வீரர்களூம், காவல்துறையை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர்.

  பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் வந்த வாகனத்தை இன்று அதிகாலை 2.30 மணியளவில் காஜாபாக் பகுதியில் வழிமறித்த தீவிரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 2 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

  அவ்வழியாக வந்த போலீஸ் ரோந்து வாகனத்தையும் வழிமறித்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

  இந்த தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் காஜாபாக் பகுதிக்கு கூடுதலாக படைகள் அனுப்பப்பட்டு, அப்பகுதியில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  Next Story
  ×