search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற ரூ.11ஆயிரம் கோடி கூடுதலாக தேவை:மத்திய அரசிடம் வேளாண்மைத்துறை அமைச்சகம் கோரிக்கை
    X

    புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற ரூ.11ஆயிரம் கோடி கூடுதலாக தேவை:மத்திய அரசிடம் வேளாண்மைத்துறை அமைச்சகம் கோரிக்கை

    புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற ரூ.11ஆயிரம் கோடி கூடுதலாக தேவை என மத்திய அரசிடம் வேளாண்மைத்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா என்ற புதிய பயிர் காப்பீட்டு திட்டம் கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 4 கோடி விவசாயிகளை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.5,500 கோடி நிதி இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    எனினும், இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற ரூ.11 ஆயிரம் கோடி கூடுதலாக தேவை என மத்திய நிதி அமைச்சகத்திற்கு வேளாண்மைத்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

    புதிய பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாலும், ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த தேசிய வேளாண்மை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய தொகை ரூ.5 ஆயிரம் கோடி பயன்படுத்தப்பட்டு வருவதாலும் கூடுதல் நிதி தேவைப்படுகிறது.

    மேலும், தற்போது மீதமுள்ள நிதியாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.476 கோடி வடகிழக்கு மாநிலங்களுக்கானது என்பதால் அவற்றை மற்ற மாநிலங்களுக்காக பயன்படுத்த முடியாது என்பதையும் வேளாண் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

    தற்போது வரை ஆந்திராவில் 20 லட்சம் விவசாயிகளும், குஜராத்தில் 13.41 லட்சம் விவசாயிகளும், கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் 9 லட்சம் விவசாயிகளும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 7.5 லட்சம் விவசாயிகளும் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளனர்.
    Next Story
    ×