என் மலர்

  செய்திகள்

  டெல்லியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் 3 வயது சிறுமி பலி
  X

  டெல்லியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் 3 வயது சிறுமி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் 3 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.
  புதுடெல்லி:

  டெல்லியில், ராணி பாக் பகுதியில், காற்றாடி பறக்கவிட பயன்படுத்தப்பட்ட ‘மாஞ்சா’ நூல், கழுத்தை அறுத்ததால் 3 வயது சிறுமி பலியானாள். அவள் பெயர் சாஞ்சி கோயல். நேற்று முன்தினம் மாலை, சினிமா பார்த்து விட்டு, பெற்றோருடன் காரில் வந்து கொண்டிருந்தாள். அந்த கார், திறந்த கூரைப்பகுதியை கொண்டது.

  காரில் நின்றபடி, திறந்த கூரைப்பகுதி வழியாக அச்சிறுமி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, அறுந்து விழுந்த ‘மாஞ்சா’ நூல் அவளது கழுத்தை அறுத்தது. அவளை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவளை பரிசோதித்த டாக்டர்கள், அவள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  இதுபோல், நேற்று டெல்லியில் மற்றொரு இடத்தில், ‘மாஞ்சா’ நூல் கழுத்தை அறுத்ததால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் என்பவர் லேசான காயம் அடைந்தார்.
  Next Story
  ×