search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திரதின விழாவின் போது ஷு கயிறை கட்டி விடும்படி பாதுகாவலருக்கு உத்தரவிட்ட மந்திரியால் சர்ச்சை
    X

    சுதந்திரதின விழாவின் போது ஷு கயிறை கட்டி விடும்படி பாதுகாவலருக்கு உத்தரவிட்ட மந்திரியால் சர்ச்சை

    சுதந்திரதின விழாவின் போது ஷு கயிறை கட்டி விடும்படி பாதுகாவலருக்கு உத்தரவிட்ட ஒடிசா மந்திரியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது
    புவனேஸ்வர்:

    ஓடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மந்திரியாக இருப்பவர் ஜோகேந்திர பெகரா.

    நாட்டின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் கியாஞ்கர் மாவட்டத்தில் நடந்த விழாவில் நேற்று அவர் கலந்து கொண்டார்.தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசினார்.

    விழா முடிந்து மந்திரி ஜோகேந்திர புறப்படும் போது அவர் ஷு அணிந்தார். ஆனால் ஷு கயிறை அவரால் கட்ட முடியவில்லை.

    இதையடுத்து அவர் ஷு கயிறை கட்டி விடும்படி தனது பாதுகாவலருக்கு உத்தரவிட்டார். உடனே அந்த பாதுகாவலர் மந்திரியின் ஷு கயிற்றை கட்டி விட்டார்.

    இந்த காட்சி உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதை பார்த்தவர்கள் மந்திரியின் செயல் திமிரானது, அநாகரீகமானது என்றனர்.

    இதனால் இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி மந்திரி ஜோகேந்திராவிடம் கேட்கப்பட்ட போது நான் விஐபி அப்படித்தான் நடந்து கொள்வேன் என்றார்.

    இதற்கு ஓடிசா மாநில சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×