search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய பொருளாதரத்திற்கு கெட்ட சகுணம்: ராஜன் முடிவு குறித்து வல்லுநர்கள் கருத்து
    X

    இந்திய பொருளாதரத்திற்கு கெட்ட சகுணம்: ராஜன் முடிவு குறித்து வல்லுநர்கள் கருத்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரகுராம் ராஜன் பதவி நீட்டிப்பு வேண்டாம் என கூறியிருப்பது இந்திய பொருளாதரத்திற்கு கெட்ட சகுணம் என்று உலகின் பல முக்கிய பொருளாதர வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜனின் பதவிக் காலம் வருகிற செப்டம்பர் மாதம் 4-ந்தேதியுடன் முடிவடைகிறது. அவருக்கு மீண்டும் பணி நீடிப்பு வழங்க கூடாது என்று பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். சாமியின் கருத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தனக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி நீடிப்பு வேண்டாம் என்று ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்.

    ரகுராம் ராஜன், தனக்கு பதவி நீடிப்பு வேண்டாம் என்றும், மீண்டும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு திரும்ப போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பணிகாலத்தில் பல சவால்களை சந்தித்து இந்தியாவை வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக மாற்றியதாகவும் எனினும் பண வீக்கம், வாராக்கடன் விவகாரத்துக்கு முடிவு கட்டுவது ஆகிய இரு பணிகள் மட்டும் நிறைவடையவில்லை. எனக்கு பிறகு இந்தப் பதவிக்கு வருபவர் திறம்பட கையாள்வார் என நம்புவதாக கூறியுள்ளார்.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்த காலத்தில் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பை ஏற்றார். அப்போது அதிக பணவீக்கம், ரூபாய் மதிப்பில் ஏற்ற-இறக்கம் என பொருளாதார நிலைமை சுமூகமாக இல்லை. ரகுராம்ராஜனின் சீர்திருத்த பணியால் பொருளாதாரம் சீரான நிலையை அடைந்துள்ளது.

    ராஜனின் முடிவு உலகின் முக்கிய பொருளாதார வல்லுநர்கல் மற்றும் கொள்கை வகுப்பாளர்களையும் ஆச்சிரியமும் அதிர்ச்சியும் அடையவைத்துள்ளது.

    ரகுராம் ராஜனனின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவை சேர்ந்தவரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதார  பேராசிரியருமான கீதா கோபிநாத் “ இந்திய பொருளாதாரத்திற்கு மிகவும் சோகமான நாள். ராஜனின் பணி மற்றும் இந்தியா மீதான அவரது பற்றை சிலர் கேள்விக்கு உட்படுத்திவரும் சூழ்நிலையில் இந்திய அரசு அவரை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்காமல் போனது மிகவும் வருத்தமடையவைக்கிறது” என தெரிவித்துள்ளார்.

    முன்னாள் நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் கூறுகையில் “ராஜன் பதவி நீட்டிப்பு வேண்டாம் என கூறியிருப்பது இந்திய பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய இழப்பு மற்றும் கெட்ட சகுணம்” என்று தெரிவித்துள்ளார்.

    ராஜன் பணியாற்றி சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் அவரது நண்பருமான லூய்கி ஜின்ஹால்ஸ் “ அவர் மீண்டும் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு திரும்ப வர முடிவு செய்திருப்பது எங்களுக்கு பெரிய ஆதாயம். ஆனால் இந்தியாவிற்கு மிகப் பெரிய இழப்பு” என்று தெரிவித்துள்ளார்.

    இந்திய வம்சாவளி பொருளாதார வல்லுநரும், பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியில் முக்கிய தலைவருமான மேக்நாத் தேசாய் “ ராஜனின் முடிவால் நான் ஆச்சிரியமடையவில்லை. இது வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பில் ஏற்படுத்தும் பாதிப்பை நினைத்து வருத்தமடைகிறேன்.” என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×