என் மலர்

  செய்திகள்

  புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது: கிரண்பேடி
  X

  புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது: கிரண்பேடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கிரண்பேடி பேட்டியில் கூறினார்.
  புதுடெல்லி:

  புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கிரண் பேடி அளித்த பேட்டி பின்வருமாறு:-

  எனது பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்ற தயாராக இருக்கிறேன். எனது வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் நாட்டின் நலனுக்காக செயல்பட தயாராக உள்ளேன். அரசு என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், என்னை துணை நிலை ஆளுநராக நியமித்ததற்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  நான் மிசோரம், கோவா, சண்டிகர் ஆகிய இடங்களில் பணியில் இருந்திருக்கிறேன். ஆனால்,  புதுச்சேரியில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் அற்புதமானது. எனது ஆளுமை மற்றும் அனுபவத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  இவ்வாறு கிரண்பேடி தெரிவித்தார்.
  Next Story
  ×