என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங். கட்சி முன்னேற்றமடைய இளைஞர்களிடம் அதிகாரத்தை வழங்க வேண்டும்: திக்விஜய் சிங்
    X

    காங். கட்சி முன்னேற்றமடைய இளைஞர்களிடம் அதிகாரத்தை வழங்க வேண்டும்: திக்விஜய் சிங்

    காங்கிரஸ் கட்சி முன்னேற்றம் அடைய இளைஞர்களிடம் அதிகாரத்தை வழங்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    கேரளா, அசாம் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் ஏற்கனவே கருத்து கூறி இருந்தார். காங்கிரசுக்கு இப்போது அவசர ஆப்பரேஷன் தேவைப்படுகிறது என்று அவர் கூறினார். இவரது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    இந்த நிலையில் மீண்டும் கருத்து கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது:–

    காங்கிரஸ் கட்சி இப்போது பல சவால்களை சந்தித்து வருகிறது. இதை எதிர் கொண்டு சமாளிக்க வேண்டும் என்றால் கட்சி அதிகாரங்களை இளைஞர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இது தவிர வேறு வழி இல்லை. நான் காங்கிரசுக்கு ஆப்பரேஷன் தேவை என்று கூறியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், இளைஞர்களிடம் கட்சியை கொடுத்தால்தான் அது எதிர்காலத்துக்கு சிறப்பாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×