என் மலர்

    செய்திகள்

    புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமானம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவிப்பு
    X

    புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமானம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுச்சேரி துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடியை நியமானம் செய்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமானம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் கிரண்பேடியை புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

    இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி, ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்றார். பின்னர் டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜிரிவாலை சமாளிக்கும் பொருட்டு பா.ஜனதாவின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் மிக மோசமான தோல்வியை தழுவினார்.

    இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமானம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பை, அந்தமான் நிக்கோபார் துணை நிலை ஆளூநர் ஏ.கே. சிங் கவனித்து வந்தார். புதுச்சேரியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிய ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமானம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×