என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரவாதியை எரித்து கொன்ற பொதுமக்கள்
    X

    மந்திரவாதியை எரித்து கொன்ற பொதுமக்கள்

    செய்வினை வைத்து பலரை கொன்றதாக கூறி பொதுமக்கள் மந்திரவாதியை எரித்து கொன்ற சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நகரி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பத்திபாக்சா ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த லட்சுமய்யா. இவர் தனது வீட்டில் செய்வினை, மாந்திரீகம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் அந்த கிராமத்தில் திடீரென்று மர்ம காய்ச்சலால் இளைஞர்கள் சிலர் இறந்தனர். அதற்கு மந்திரவாதி லட்சுமய்யாவின் செய்வினை கோளாறுதான் காரணம் என பொதுமக்கள் நம்பினர்.

    ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து மரத்தில் நிர்வாணமாக கட்டி வைத்தனர்.

    அவர் தான் சக்தி பெறுவதற்காக மட்டுமே பூஜை செய்வதாகவும், பொதுமக்களுக்கு கேடு விளைவிக்க பூஜை செய்யவில்லை என்று கூறியும் கேட்காத பொதுமக்கள் அவரை அடித்து உதைத்தனர்.

    பின்னர் மரக்கட்டையால் தீ மூட்டி லட்சுமய்யாவை தீயில் தள்ளி எரித்து கொலை செய்தனர்.

    இந்த சம்பவம் தம்மம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்த விழுகூடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×