என் மலர்
செய்திகள்

கோடை விடுமுறைக்கு மணாலி போகமாட்டோம்: பிரதமர் மோடிக்கு தலைமை நீதிபதி பதில்
கோடை விடுமுறைக்கு மணாலி போகமாட்டோம் என்று பிரதமர் மோடிக்கு தலைமை நீதிபதி பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் நேற்று மாநில முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்ட மாநாட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய, ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுபவர்களையும், நீதித்துறையின் சுமையையும் குறைத்து இந்திய நீதித்துறையை காப்பாற்றுங்கள்.” என்று பிரதமர் மோடியிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
இது பலத்த விவாதங்களை கிளப்பியது. இதன்பிறகு பேசிய மோடி, நீதிபதிகள் கோடை விடுமுறைக்கு செல்வதை தவிர்க்கலாம் என்று யோசனை கூறினார்.
இன்று பிரதமர் மோடியின் யோசனைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், “நாங்கள் கோடை விடுமுறைக்கு மணாலி போகமாட்டோம். எங்களைப் போல் பார் கவுன்சிலை சேர்ந்த வழக்கறிஞர்களும் கோடை விடுமுறைக்கு செல்லாமல் இருக்க தயாரா? என்று கேளுங்கள்.
நாங்கள் ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்பு எழுதுகிறோம். ஆனால் வழக்கின் ஒரு தரப்பு தயாராக இருக்கும் போது மற்றொரு தரப்பு வருவது இல்லை.” என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.

Next Story