என் மலர்
இந்தியா

குஜராத் கடற்பகுதி அருகே 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது
- படகுடன் 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
- ஒரு மொபைல் போன் மற்றும் பாகிஸ்தான் நாணயத்தில் ரூ.200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கடற்பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு ஒரு படகில் பாகிஸ்தான் மீனவர்கள் இருப்பதை கண்டனர். இதையடுத்து படகுடன் 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைதானவர்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சுஜாவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் படகில் சுமார் 60 கிலோ மீன்கள், 9 மீன்பிடி வலைகள், டீசல், உணவுப் பொருட்கள், ஐஸ், மரக்குச்சிகள், ஒரு மொபைல் போன் மற்றும் பாகிஸ்தான் நாணயத்தில் ரூ.200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த மீனவர்களிடம் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






