என் மலர்

  செய்திகள்

  7000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்டது: முழு தகவல்கள்
  X

  7000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்டது: முழு தகவல்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜியோணி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
  பீஜிங்:

  ஜியோணி நிறுவனத்தின் M2017 பிரீமியம் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. CNY6,999 அதாவது இந்திய மதிப்பில் ரூ.68,400 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் வெளியிடுவது குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. மற்றொரு பதிப்பு கஸ்டம் அலிகேட்டர் லெதர் பேக் பேனல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் CNY16,999 அதாவது இந்திய மதிப்பில்ரூ.1,66,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது 

  சிறப்பம்சங்களை பொருத்த வரை ஜியோணி M2017 ஸ்மார்ட்போனில் இரண்டு 3500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. அப்படியாக இதன் மொத்த பேட்டரி திறன் 7000 எம்ஏஎச் அளவு வழங்குகிறது. இத்துடன் குவிக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. 

  டூயல் சிம் கொண்டிருக்கும் ஜியோணி M2017 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் QHD 1440x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே மற்றும் வளைந்த எட்ஜ், சஃப்பையர் கிளாஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இத்துடன் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 653 பிராசஸர், 6GB ரேம் வழங்கப்படுகிறது. ஜியோணி M2017 அமிகோ 3.5 யூஸர் இன்டர்ஃபேஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் வழங்கப்படுகிறது. 

  ஆப்டிக் அம்சங்களில் டூயல் கேமரா செட்டப் அதாவது 12எம்பி + 13எம்பி பிரைமரி கேமரா, மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இன்டர்னல் மெமரியை பொருத்த வரை 128GB வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

  கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்தவரை முன்பக்கம் இயங்கும் கைரேகை ஸ்கேனர், 4G, GPS, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
  Next Story
  ×