search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    தேவேந்திர பட்னாவிசை முதல்வர் ஆக்கும்படி அன்னா ஹசாரே சொன்னாரா?
    X

    தேவேந்திர பட்னாவிசை முதல்வர் ஆக்கும்படி அன்னா ஹசாரே சொன்னாரா?

    பிடிஐ செய்தி நிறுவனத்தின் பெயரில் வெளியான ஒரு டுவிட்டர் பதிவு வைரலானது.

    மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியின் அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடனான கூட்டணியை சிவ சேனா முறித்துக்கொண்டு பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க வேண்டும் என அதிருப்தி குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

    இந்த சூழ்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்தின் பெயரில் வெளியான ஒரு டுவிட்டர் பதிவு வைரலானது. மகாராஷ்டிர முதல்வராக பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிசை தேர்ந்தெடுக்காவிட்டால் சகி நாகா ரெயில் நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவேன், என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுப்பதாக அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பார்த்த பலரும் அன்னா ஹசாரேவுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர்.

    இதையடுத்து, உண்மை சரிபார்க்கும் ஊடக நிறுவனமான பூம், இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில், சம்பந்தப்பட்ட பதிவு வெளியான டுவிட்டர் கணக்கு பிடிஐ பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் போலியான கணக்கு என்பது கண்டறியப்பட்டது. அத்துடன், மகாராஷ்டிராவில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பாக, அன்னா ஹசாரே எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவந்தது.

    மேலும், அந்த தகவலின் குறிப்பிட்டபடி மும்பை அந்தேரி கிழக்கில் அமைந்துள்ள சகி நாகாவில் ரெயில் நிலையம் இல்லை, மெட்ரோ நிலையம் மட்டுமே உள்ளது. எனவே, பிடிஐ பெயரில் வெளியிடப்பட்ட பதிவு போலியானது என உறுதி செய்யப்பட்டது.

    Next Story
    ×