என் மலர்
உள்ளூர் செய்திகள்

சட்டக் கல்லூரி மாணவியை கேலி செய்த இளைஞர்கள்
- மாணவியை தகாத வார்த்தையால் திட்டி அந்த இளைஞர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
- இருதரப்பினர்கள் இடையே மோதி கொண்டனர். இதில் மாணவியின் தரப்பினர் 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் முத்தானூர் அருகே உள்ள கம்மாளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது மாணவி.
இவர் சேலம் அரசு சட்டக் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு தனியார் பேருந்தில் இறங்கி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த வழியாக வந்த பெண்களை கேலி கிண்டல் செய்தனர். மாணவியை தகாத வார்த்தையால் திட்டி அந்த இளைஞர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவி தனது தாயிடம் கூறினார். பின்னர் அந்த பெண்ணின் தாயார் அந்த இளைஞர்களிடம் இந்த மாதிரி பெண்களை ஏன் கேலி செய்கிறீர்கள் என்று தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அப்போது இருதரப்பினர்கள் இடையே மோதி கொண்டனர். இதில் மாணவியின் தரப்பினர் 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அரூர் போலீல் நிலையம் முன்பாக திரண்டனர். இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறினார். இதனால் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






