search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    டி.சி.ஆர். மருத்துவமனையில் உலக பாம்புகள் தின விழிப்புணர்வு கூட்டம்
    X

    விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    டி.சி.ஆர். மருத்துவமனையில் உலக பாம்புகள் தின விழிப்புணர்வு கூட்டம்

    • கூட்டத்திற்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.டி.சி.ஆர்.சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார்.
    • பாம்புகளின் குணங்கள் குறித்து விளக்கம் அளிக்கபட்டது.

    கிருஷ்ணகிரி,

    பாம்பு இனங்களை பாதுகாக்கும் நோக்கிலும், பாம்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக பாம்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு நேற்று முன்தினம் கிருஷ்ண கிரியில் உள்ள டி.சி.ஆர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில், பாம்புகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.டி.சி.ஆர்.சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். டி.சி.ஆர். பஸ் உரிமையாளர் முருகேசன், சங்கீதா சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை டாக்டர்.சின்னராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

    இதில் சிறப்பு விருந்தி னர்களாக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செல்லக்குமார், சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை யாற்றினார்கள்.

    நிகழ்ச்சியில் பேசிய டாக்டர்கள் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகள் நல்ல பாம்பு, கட்டு வீரியன், கண்ணாடி வீரியன், சுருட்டை வீரியன், பூ பாம்பு ஆகியவையாகும் என கூறிய அவர்கள், பாம்புகளின் குணங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம், வக்கீல் காசிலிங்கம், டாக்டர்கள் அறிவுச்செல்வன், ராஜா, உமாபதி, பர்கூர் விஜய் வித்யாலயா நர்சிங் கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவி தலைமையில் மாணவ, மாணவிகள், ஜீவா நர்சிங் கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமையில் மாணவ, மாணவிகள், டி.சி.ஆர். கல்லூரி முதல்வர் சுமதி தலைமையில் மாணவ, மாணவிகள், நாளந்தா சர்வதேச பொதுப்பணி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி.சி.ஆர். மருத்துவமனை மருத்துவர்கள் ரஞ்சனா, உதயசந்திரிகா, கெமிலா, பவித்ரா, யுவதாரணி, சையத் மோகித் உசைன், முதன்மை செயல் அலுவலர் அனிதா, நிர்வாக அலுவலர் சாவீர்பாஷா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×