search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் 3 லட்சத்து 73 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளது- ராதாகிருஷ்ணன் தகவல்
    X

    சென்னையில் 3 லட்சத்து 73 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளது- ராதாகிருஷ்ணன் தகவல்

    • 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1730 சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது.
    • சென்னையில் நேற்று வரை 3,73,022 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பப் பதிவு சிறப்பு முகாம்கள் மூன்று கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் நடத்தப்படுகிறது.

    மொத்தம் உள்ள 1428 நியாய விலைக்கடைகளில், முதல் கட்டமாக 704 நியாய விலைக் கடைகளுக்கு 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 724 நியாயவிலைக் கடைகளுக்கு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும், மூன்றாம் கட்டமாக விடுபட்டவர்களுக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக 704 நியாய விலைக் கடைகளில், 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1730 சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது.

    சென்னையில் நேற்று வரை 3,73,022 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. தேதி வாரியாக வருமாறு:- 24.7.2023-ந் தேதி 56,590 விண்ணப்பங்கள், 25-ந் தேதி 72,380 விண்ணப்பங்கள், 26-ந் தேதி 72,080 விண்ணப்பங்கள், 27-ந் தேதி 69,934 விண்ணப்பங்கள், 28-ந் தேதி 58,753 விண்ணப்பங்கள், 29-ந் தேதி (நேற்று) 43,285 விண்ணப் பங்களும் பெறப்பட்டுள்ளன. இந்த தகவலை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    Next Story
    ×