என் மலர்
உள்ளூர் செய்திகள்

வன விலங்குகளை வேட்டையாடியவர் கைது
- குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்தனர்.
- தகவல் தெரிவிக்க மாவட்ட வன அலுவலர் எண் 1800 4254 586 -க்கு அழைக்கலாம் என்றுதெரிவித்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி வனக்கோட்டம் மொரப்பூர் வனச்சரகம் கம்பைநல்லூர் முதல் அரூர் சாலையில் மாவட்ட வன அலுவலர் கே.வி. அப்பாலநாயுடு, உத்தரவுபடி, உதவி வனப்பாதுகாவலர் சரவணன், அறிவுரையின்படி மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் ரவி வனவர், சாம்பசிவம், சுரேஷ் வனக்கா ப்பாளர், ஒட்டுநர் ஆகியோர் அண்ணாமலைப்பட்டி பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் ஒரு பையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது பையில் 2 உடும்புகள் (1 உயிருடன் 1 இறந்த நிலையில்). 2 கௌதாரி ( உயிருடன்) 1 கீரிப்பிள்ளை ( உயிருடன்) இருப்பதை கண்டுபிடித்தனர்.
விசாரணை மேற்கொண்டதில் பிடிப்பட்ட நபர் பெரியசாமி (வயது 47 என தெரிய வந்தது.
அவரை கைது செய்து மாவட்ட வன அலுவலரது அறிவுரைப்படி அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்தனர்.
மேலும் வன உயிரினங்களை வேட்டையாடினாலோ, விற்பனைக்கு விற்றாலோ அல்லது விற்பனை செய்பவர்களிடம் கறி வாங்கினாலோ வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி கடுமையாக தண்டிக்கப்படும். மேலும் வனக்குற்றங்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க மாவட்ட வன அலுவலர் தருமபுரி இலவச அழைப்பு எண் 1800 4254 586 -க்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.