search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சொக்கநாதருடன் வந்த தருமபுரம் ஆதீனத்திற்கு வரவேற்பு
    X

    சொக்கநாதபெருமானுடன் வந்த தருமபுரம் ஆதீனத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சொக்கநாதருடன் வந்த தருமபுரம் ஆதீனத்திற்கு வரவேற்பு

    • திருநன்றியூரில் இருந்து புறப்பட்டு வைத்தீஸ்வரன்கோயிலில் சொக்கநாதர் பெருமானுடன் எழுந்தருளினார்.
    • தருமபுர ஆதீனம் சொக்கநாதர் பெருமானுடன் முக்கிய வீதிகளின் வழியாக பாதயாத்திரை மேற்கொண்டார்.

    சீர்காழி:

    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி சட்டநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 24-ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்பதற்காக பூஜாமூர்த்தியான சொக்கநாதபெருமானுடன் தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 11-ம் தேதி ஆதீனத்தில் இருந்து புறப்பட்டு தரங்கம்பாடி சாலை, மயூரநாதர் சுவாமி கோயில், பட்டமங்கலத்தெரு, வள்ளலார்கோயில் வழியாக பாதயாத்திரையாக திருநன்றியூர் உலகநாயகி சமேத லட்சுமிபுரீஸ்வரர் கோவிலில் சொக்கநாத பெருமானை எழுந்தருளச் செய்தார்.

    12-ம் தேதி மாலை திருநன்றியூரில் இருந்து புறப்பட்டு வைத்தீஸ்வர ன்கோயில் வைத்தியநா தசுவாமி கோயிலில் சொக்கநாத பெருமானுன் எழுந்தருளினார்.

    அங்கு இரண்டு நாட்கள் தங்கி வழிபாடு நடத்திய பின்னர் நேற்று அங்கிருந்து சீர்காழி புறப்பட்டது.

    சீர்காழி நகர எல்லையான உப்பனாற்றாங்கரை வந்தடைந்த குரு லிங்க சங்கம பாதயாத்திரை மேற்கொண்டு வரும் தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு சொக்கநாதர் பெருமானுடன் தருமபுரம் ஆதீனம் மேடையில் எழுந்தருளினார்.

    100 நாதஸ்வர,மேளம் இசைத்தும், கேரள பாரம்பரிய தெய்வ வேடமணிந்து பக்தர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருகைபுரிந்து வரவேற்றனர். பின்னர் யானை, ஒட்டகம், குதிரை ஆகிய மங்கள சின்னங்கள் முன்னே செல்ல தருமபுரம் ஆதீனம் சொக்கநாதர் பெருமானுடன் முக்கிய வீதிகளின் வழியாக பாதயா த்திரை மேற்கொண்டார்.

    பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் ஆதீனம் வழங்கியவாறு சென்றார். நான்கு தேர் வீதிகளின் வழியாக சட்டநாதர் சுவாமி கோயிலை தருமபுரம் ஆதினம் வந்தடைந்து அங்கு மாசிலாமணி நிலையத்தில் சொக்கநாதர் பெருமானை எழுந்தருள செய்தார். இதில் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மாணிக்காவசகதம்பிரான் சுவாமிகள், சிவகுருநாத தம்பிரான்சுவாமிகள், ஆதீன கல்லூரி நிர்வாகத்தினர், சீர்காழி, வைத்தீஸ்வர ன்கோயில் பகுதி பக்தர்கள் உட்பட பலர் சென்றனர்.

    Next Story
    ×