search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையத்தில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மரியாதை
    X

    ராஜபாளையத்தில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மரியாதை

    • ராஜபாளையத்தில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மரியாதை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள்விழா நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள்விழா நடந்தது. பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். படத்துடன் நகர் வடக்கு செயலாளர் வக்கீல் துரை முருகேசன், நகர் தெற்கு செயலாளர் பரமசிவம், மாவட்ட பேரவை செயலாளர் எம்.என்.கிருஷ்ணராஜ் தலைமையில் கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.குருசாமி, நவரத்தினம் முன்னிலையில் ஊர்வலமாக சென்று பி.ஏ.சி.ஆர். சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினர்.

    இதில் மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் அழகுராணி, சேத்தூர் பேரூர் செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் வனராஜ், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் யோகசேகரன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி எம்.பி.கே.புதுப்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அழகாபுரியான், மகளிர் அணி கந்த லீலாவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×