என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் இருக்கும் ஜல்லியை சேகரிக்கும் பணியில் கிராம மக்கள்
    X

    வீணாக்கி விடக்கூடாது என்பதற்காக சாலையில் இருந்து சிதறும் ஜல்லிகளை சேகரித்து மீண்டும் சாலையிலேயே கொட்டி வருவதை பணியாக செய்து வருவதை படத்தில் காணலாம்.

    சாலையில் இருக்கும் ஜல்லியை சேகரிக்கும் பணியில் கிராம மக்கள்

    • இளைஞர்கள் அவ்வப்போது தங்கள் கிராமத்திற்கு சாலை அமைக்க நிரந்தர தீர்வு தான் ஏற்படுத்த முடியவில்லை
    • வீணாக்கி விடக்கூடாது என்பதற்காக சாலையில் இருந்து சிதறும் ஜல்லிகளை சேகரித்து மீண்டும் சாலையிலேயே கொட்டி வருவதை பணியாக செய்து வருகின்றனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம், ஏர்ரபையனஹள்ளி ஊராட்சியில் மெட்டுக்கல் கோம்பை கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதிக்கு சாலை வசதிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மண்சாலையாக இருந்த ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு ஜல்லி போடப்பட்டு தார் சாலை அமைத்து தருகிறோம் என்று தெரிவித்து அப்போதைக்கு மட்டும் ஜல்லிகளை சாலையில் பரப்பி உள்ளனர். இதன் பிறகு அதிகாரிகளோ ஒப்பந்ததாரர்களும் யாரும் கடந்த 3 ஆண்டுகளாக திரும்பி கூட பார்க்கவில்லை என அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இருப்பினும் தங்களுக்கு சாலை தேவை என்பதால் ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட கலெக்டர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரிடமும் தொடர்ந்து முறையிட்டு கோரிக்கையும் வைத்துள்ளனர். மேலும் இப்பகுதி மூன்று ஊராட்சிகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் எந்த உள்ளாட்சி பிரதிநிதிகளும் அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவி ல்லை.

    கரடு முரடான சாலையில் வாகனங்கள் இயக்க முடியாமல் சிரமமாக இருந்த நிலையில் அவசர மருத்துவ சேவை மற்றும் இரவு நேரங்களில் ஏதும் விச பூச்சிகள் கடித்தாலும் மருத்துவமனைக்கோ அல்லது ஆம்புலன்ஸ் செல்வதற்கோ கூட எளிதில் செல்ல முடியாத நிலையில் சாலை உள்ளது.

    ஜல்லிகள் மட்டுமே சாலையில் பரப்பி இருந்ததால் வாகனங்கள் இயக்க முடியாத நிலை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் மழை பெய்ததின் காரணமாக சாலையில் இருந்த ஜல்லிகள் பெயர்ந்து மழை நீர் கால்வாயில் புதைந்தன.

    இதனால் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் அவ்வப்போது தங்கள் கிராமத்திற்கு சாலை அமைக்க நிரந்தர தீர்வு தான் ஏற்படுத்த முடியவில்லை. இருப்பினும் சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிகள் நம்முடைய வரிப்பணத்தில் தான் வந்தது.

    அதனால் அவற்றை வீணாக்கி விடக்கூடாது என்பதற்காக சாலையில் இருந்து சிதறும் ஜல்லிகளை சேகரித்து மீண்டும் சாலையிலேயே கொட்டி வருவதை பணியாக செய்து வருகின்றனர்.

    சாலை அமைக்கப்படும் என்று எதிர்பார்த்த கிராம மக்களுக்கு சாலைக்காக போடப்பட்ட ஜல்லியை சேகரிக்கும் பணியை தினமும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×