search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை வசதி வேண்டி கிராம மக்கள் சாலை மறியல்
    X

    சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    சாலை வசதி வேண்டி கிராம மக்கள் சாலை மறியல்

    கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் சாலைவசதிகள் இல்லாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாக்கப்பட்டு வருகிறோம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே திருவிழந்நூர் ஊராட்சி காமராஜர் தெருவை சேர்ந்தவர்கள் சாலைவசதி செய்து தரகோரி சாலை மறியல் செய்தனர்.

    தகவலறிந்த இன்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது சாலை மறியல் செய்த மக்கள் கூறியதாவது. கடந்த பத்து வருடங்களுக்கு மேல் சாலைவசதிகள் இல்லாமல் பெரும் சிரமத்து க்கு ஆளாக்கப்பட்டு வருகிறோம். ஆளுங்கட்சியை சேர்ந்த கூட்டணி எம்.எல்,ஏ. சாலை போட்டு தருவதாக வாக்குறுதி அளித்தார் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

    பள்ளி மாணவ மாணவிகள்,வேலைக்கு போகிறவர்கள் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் உள்ளிட்டவர்கள் குண்டும் குழியுமான சாலையை கடந்து செல்ல வேண்டி இருப்பதால் அவசர உதவிக்கு ஆட்டோக்காரர்கள் கூட வருவதில்லை. இப்பகுதியில் சுமார் 250 குடும்பங்களை சேர்ந்தவர்கள்வசித்து வருகிறோம்.எங்க ளுக்கு உடனடியாகஇப்பகு தியில்சாலை வசதியை ஏற்்படுத்தி தர வேண்டும் என்ற னர்.உரிய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×