என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்க தாமதமாகும்
  X

  வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்க தாமதமாகும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பயணிகள் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கும் பணிகள் மற்றும் சில பணியை செய்ய உள்ளனர்.
  • பொதுமக்கள் அங்கு சென்று ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  வேலூர்:

  வேலூரில் புதிதாக கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். புதிய பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடந்து வந்ததால் திருப்பதி சித்தூர் செல்லும் பஸ்கள் ஆட்டு தொட்டி பஸ் நிலையத்தில் இருந்தும் மற்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

  நேற்று புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டாலும் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது.

  புதிய பஸ் நிலையத்தில் இன்னும் சில பணிகள் செய்ய வேண்டிய உள்ளது. பயணிகள் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கும் பணிகள் மற்றும் சில பணியை செய்ய உள்ளனர்.

  இந்த பணிகள் முடிவடைந்த பிறகு தான் புதிய பஸ் நிலையம் முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதுவரை பழைய பஸ் நிலையம் மற்றும் ஆட்டு தொட்டி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். பொதுமக்கள் புதிய பஸ் நிலையத்திற்கு சென்று ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Next Story
  ×