என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இளைஞரணி மாவட்ட தலைவர் நவீன் தங்க மோதிரம் அணிவித்தார்.
வேலூரில் நடிகர் விஜய் பிறந்த நாள் விழா
வேலூர்:
நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி சார்பில் மாவட்ட தலைவர் நவீன் தலைமையில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
இதையடுத்து சேண்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.சத்துவாச்சாரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே 1048 பேருக்கு சிக்கன் பிரியாணி மற்றும் இலவச வேஷ்டி, சேலை, தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அணைக்கட்டு கிழக்கு, மத்திய ஒன்றிய இளைஞரணி சார்பாக பலவன்சாத்து குப்பத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும் விஜய் மக்கள் இயக்க கொடி ஏற்றி, பெயர் பலகையை திறந்து வைத்தார். மாலை சேண்பாக்கத்தில் இளைஞரணி சார்பாக நலத்திட்ட உதவிகளை மாவட்ட இளைஞரணி தலைவர் எ.நவீன், தொண்டர் அணி தலைவர் சீனிவாசன், இளைஞரணி செயலாளர் கருணாகரன் ஆகியோர் வழங்கினர்.
சத்துவாச்சாரியில் நடந்த பொது மருத்துவம் முகாமில் திரளானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
நிகழ்ச்சியில் இளைஞர் அணி பொருளாளர் ஆர்.வெங்கட், இளைஞரணி மாவட்ட ஆலோசகர் டாக்டர் என் வெற்றிவேல், தொண்டரணி பொருளாளர் எஸ்.சுரேஷ், தொண்டரணி இணை செயலாளர் லோகேஷ் மற்றும் மாவட்ட இளைஞர் அணி தொண்டர் அணி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.