என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம்
    X

    மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம்

    • ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • இதில் ஒன்றிய செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருச்சி,

    திருச்சி மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கமலம் கருப்பையா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் புவனேஸ்வரி சக்திவேல் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தகுமார் வரவேற்று பேசினார். இதில் ஒன்றிய செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பின்னர் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை பேசினர். அப்போது நாச்சி குறிச்சி ஊராட்சி கோனார் சத்திரத்தில் இருந்து இனியானூர் வரை உள்ள சாலை, மேக்குடி சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர்,ஒன்றிய குழு கவுன்சிலர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா (கிராம ஊராட்சி )ஒன்றிய குழு கவுன்சிலர்கள், பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×