என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தமிழக அரசின் அடுத்த பத்தாண்டுக்கான தொலைநோக்கு திட்ட கலந்தாய்வு கூட்டம்
  X

  தமிழக அரசின் அடுத்த பத்தாண்டுக்கான தொலைநோக்கு திட்ட கலந்தாய்வு கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழக அரசின் அடுத்த பத்தாண்டுக்கான தொலைநோக்கு திட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
  • பழனியாண்டி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது

  திருச்சி:

  திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் தமிழக அரசின் அடுத்த பத்து ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் சோமரசம்பேட்டையில் நடைபெற்றது. இதில் அந்தநல்லூர் ஒன்றியம், மணிகண்டம் ஒன்றியம், சிறுகமணி பேரூராட்சி மற்றும் மணப்பாறை ஒன்றியம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய பெருந்தலைவர்கள் பேரூராட்சி தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர்.

  மேலும் பேரூராட்சி உறுப்பினர்கள், கல்வித்துறை சுகாதாரத்துறை, வருவாய் துறை,வேளாண்மை துறை தோட்டக்கலைத்துறை பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு அடுத்த பத்தாண்டுக்கான தொலைநோக்கு திட்டத்திற்கான நிறைவேற்ற வேண்டிய முக்கிய பணிகள் மற்றும் கிடப்பில் இருக்கும் பணிகள் ஆகியவைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

  இதில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டியிடம் தங்கள் பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்து வாய்மொழி மூலமாகவும், மனு மூலமாகவும் தெரிவித்தனர். இது குறித்து அவர் உடனடியாக அங்கு வந்திருந்த அந்தந்த துறையை சார்ந்த அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து உடனடியாக தீர்வு காணப்படும் என்று உறுதிமொழி அளித்தார்.

  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், புங்கனூர்-அல்லித்துறை சாலை மற்றும் இனியானூர்- அல்லித்துறை சாலைகள் மிகவும் பழுதடைந்து இருப்பதால் இது குறித்து ஏற்கனவே நெடுஞ்சாலை துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக தீர்வாக கிராவல் மண் மூலம் சாலை சரி செய்யப்படும். மேலும் மணப்பாறை பகுதிகளில் உள்ள ஊராட்சிகள் மற்றும் மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு சில ஊராட்சிகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

  அந்தநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட போசம்பட்டியில் விரைவில் மலர் வாசனை திரவிய தொழிற்சாலை தொடங்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இக்கூட்டத்தில் மணிகண்டம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் துரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×