என் மலர்
உள்ளூர் செய்திகள்

துறையூர் பாலக்கரையில் நாளை ஸ்ரீஅபிநயா தங்க மாளிகை திறப்பு விழா - அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார்
- துறையூர் பாலக்கரையில் நாளை ஸ்ரீஅபிநயா தங்க மாளிகை திறப்பு விழா பெறுகிறது,
- நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய நகைகடையை திறந்து வைக்கிறார்.
திருச்சி
திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் ஸ்ரீஅபிநயா தங்க மாளிகை என்ற புதிய தங்க நகைகடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நாளை ( ஞாயிற்றுகிழமை) நடைபெற உள்ளது.
விழாவுக்கு திருச்சி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் துறையூர் நகராட்சி நகர்மன்ற துணைத் தலைவர் மெடிக்கல் முரளி முன்னிலை வகிக்கிறார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய நகைகடையை திறந்து வைக்கிறார். முதல் விற்பனையை பெங்களூரு மஹிமா ஜூவவல்லரி கிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.
சிறப்பு விருந்தினர்களாக கரூர் எஸ்.என்.கே. ஜூவல்லரி ரவி, திருச்சி ஹரிணி ஜுவல்லர்ஸ் செல்வராஜ், கொழும்பு தேவி ஜுவல்லர்ஸ் ரத்தீஸ்காந்த், நாமக்கல் பாஸ்கர் ஜுவல்லரி பாஸ்கர், துறையூர் ஜெய்ராக்ஸ் பூச்சிமருந்து நிறுவன கனகராஜ், துறையூர் நகர ரெட்டிநல சங்க தலைவர் கருணாகரன்,
துறையூர் தாலுக்கா ரெட்டிநல சங்க தலைவர் ரவி, திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சோபனபுரம் கனகராஜ், சென்னை சரவணா ஜூவல்லர்ஸ் ஜெயராம், துறையூர் பாலக்கரை நியூ பத்மாஸ் ஹோட்டல் சத்திய நாராயணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.






