என் மலர்
உள்ளூர் செய்திகள்

துறையூரில் மணல் கடத்திய லாரி பறிமுதல்
- சுரங்கத் துறை தனி வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், தலைமையில் உதவி புவியியலாளர் தேன்மொழி உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்
- அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்றினை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
திருச்சி :
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் பிரிவு சாலையில் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், தலைமையில் உதவி புவியியலாளர் தேன்மொழி உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.
அப்பொழுது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்றினை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (37) என்பதும், அதே கிராமத்தை சேர்ந்த வளர்மதி (36) என்பவருக்கு சொந்தமான டாரஸ் லாரியில் மூன்று லோடு அளவுள்ள கிராவல் மண்ணை உரிய அனுமதியின்றி கொண்டு செல்வது தெரிய வந்தது. இந்நிலையில் செந்தில்குமார் லாரியில் இருந்து குதித்து தப்பியோடி விட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக உதவி புவியியலாளர் தேன்மொழி துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் டிரைவர் செந்தில்குமார், டாரஸ் லாரி உரிமையாளர் வளர்மதி ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.






