என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி துவாக்குடி பகுதிகளில நாளை மின்தடை
    X

    திருச்சி துவாக்குடி பகுதிகளில நாளை மின்தடை

    • துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை20-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புகள் நடைபெற உள்ளது.
    • துவாக்குடி தொழில்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா காலனி, தேவராயனேரி பொய்கை குடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    திருச்சி,

    துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை20-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புகள் நடைபெற உள்ளது.

    எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் சாரம் பெறும் பகுதிகளான நேரு நகர், அண்ணா வளைவு, ஏ ஓ எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி. சாலை, ராவுத்தன்மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப், சி ஏ இ ஆர் மற்றும் பி எச் செட்டர், தேசிய தொழில்நுட்பகழகம் துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழில்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா காலனி, தேவராயனேரி பொய்கை குடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இத்தகவலை மன்னார்புரம் தமிழ்நாடு மின் உற்பத்தி கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×