என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சியில் பெயர் பலகைகளில் புதிய வார்டு எண், மண்டலம் விபரம் தெரிவிக்க வேண்டும் - கம்யூனிஸ்டு கவுன்சிலர் மேயரிடம் மனு
- திருச்சியில் பெயர் பலகைகளில் புதிய வார்டு எண், மண்டலம் விபரம் தெரிவிக்க வேண்டும் கம்யூனிஸ்டு கவுன்சிலர் மேயரிடம் மனு அளித்துள்ளார்.
- மேலும் மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் வாகனத்தில் செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
திருச்சி,
திருச்சி மாநகராட்சி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது வார்டு கவுன்சிலர் க.சுரேஷ்குமார் மாநகராட்சி மேயர் மு.அன்பழகனிடம் ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளிலும் அமைந்துள்ள தெருக்களின் பெயர்களைக் கொண்ட பெயர்பலகைகளில் தெருக்களின் பெயர்கள் மட்டுமே உள்ளது. புதிதாக அமைந்துள்ள மண்டலம் எண் மற்றும் வார்டுகளின் எண் குறிப்பிடப்படாததால் அங்கு வசிப்பவர்களுக்கும், வெளியில் இருந்து வருபவர்களுக்கும் சரியான விவரம் தெரியாமல் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.
ஆகவே 65 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளிலும் மண்டலம் எண், வார்டு எண் குறிப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் வாகனத்தில் செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனை கட்டுப்படுத்த தெருநாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் சமீப காலமாக மேற்கொள்ளப்படாததால் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






