என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முசிறியில் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்
  X

  முசிறியில் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
  • 28 ஆயிரம் பேருக்கு ரூ.600 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

  முசிறி:

  திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி வடக்கு மாவட்ட அவை தலைவர் அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்ரீரங்கம் பழனியாண்டி, திருச்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியினர் தி.மு.க. ஆட்சி நடத்துவது சரியில்லை என குறை கூறி வருகின்றனர். ஒருபுறம் கடுமையான நிதி நெருக்கடி, மறுபுறம் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொண்டு தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியினை தமிழக மக்களுக்கு வழங்கி வருகிறார், தி.மு.க. கூட்டணி சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினரான பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து சிறிதளவும் நன்றி இல்லாமல் அதனை மறந்து இடையிலேயே விலகிவிட்டார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரிவேந்தரைப் போல இல்லாமல் தி.மு.க. கட்சிக்கு விசுவாசியாக உள்ள ஒரு நபரை தேர்வு செய்து, 12 ஆண்டு காலமாக உழைத்த நமது கட்சி செயல் வீரர்கள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் முனைப்புடன் செயல்பட வேண்டும். பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் முசிறி காவேரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்து முசிறியில் இருந்து துறையூரை அடுத்த சிங்களாந்தபுரம் வரை உள்ள ஏரிகளுக்கு காவிரி நீரை குழாய் மூலம் கொண்டு சென்று நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வருகிற 29-ந்தேதி திருச்சியில் நடைபெறும் அரசு விழாவில் 3500 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் கடன் உதவியும், 28 ஆயிரம் பேருக்கு ரூ.600 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் மணப்பாறையில் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் புதிய எந்திரம் ஒன்றையும் தொடங்கி வைக்க உள்ளார். ஆகவே தமிழக முதல்வருக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்க்கும் கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முசிறி ஒன்றிய செயலாளர்கள், நகர, பேரூர் கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


  Next Story
  ×