என் மலர்
உள்ளூர் செய்திகள்

டால்மியாபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் நிறைவு விழா
- திருச்சி மாவட்டம் டால்மியாபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் ஸ்டார் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது
- பதினேழு விருதுகள் பெற்றுத் தந்த தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் செயலாளர் ரமேஷ் ஆகியோரை அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்
திருச்சி:
திருச்சி மாவட்டம் டால்மியாபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் ஸ்டார் ஆண்டு நிறைவு விழா டால்மியாபுரம் சிமெண்ட் ஆலை கூட்ட அரங்கில் நடைபெற்றது. தலைவர் சுந்தரராஜன் வரவேற்றார்.
விழாவில் ரோட்டரி நண்பர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து கலந்து கொண்டனர். பதினேழு விருதுகள் பெற்றுத் தந்த தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் செயலாளர் ரமேஷ் ஆகியோரை அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.
விழாவில் பப்ளிக் இமேஜ் டிஸ்பிளே சேர்மன் திருச்சி கே.சீனிவாசன், மாவட்ட செயலாளரும், அசோசியேட் கவர்னருமான மதுரை விஸ்வநாராயண், துணை ஆளுநர் ஜெயங்கொண்டம் குமணன் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டிப் பேசினார்கள்.
விழா நிறைவில் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
Next Story






