என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மண்டல தலைமை தபால் நிலைய அதிகாரிக்கு  பிடி வாரண்ட்
    X

    மண்டல தலைமை தபால் நிலைய அதிகாரிக்கு பிடி வாரண்ட்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மண்டல தலைமை தபால் நிலைய அதிகாரிக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது
    • நீதிமன்றம் உத்தரவு

    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் பகுதி சுந்தர் நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் திருச்சி குற்றவியல் நீதிதுறை நடுவர் எண் 2ல் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தனது தரப்பை நிருபிக்க ஒரு சாட்சியமாக திருச்சி மண்டல தலைமை தபால் நிலைய அதிகாரி ஒருவரை விசாரிக்க நீதிமன்றத்தில் முருகானந்தம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது திருச்சி மண்டல தலைமை தபால் நிலைய அதிகாரிக்கு நீதிமன்றம் சார்பில் அழைப்பாணை வழங்கப்பட்டது. இந்த நிலையில், நீதிமன்றத்தில் தபால் நிலைய அதிகாரி ஆஜராகவில்லை. இதன் காரணமாக நீதிமன்றம் தபால் அதிகாரிக்கு சாட்சியமளிக்க பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×