என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  84 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல்
  X

  84 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணப்பாறை அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட போது பிடிபட்டது
  • 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

  மணப்பாறை,

  திருச்சி மாவட்டம், மணப்பாறைய அடுத்த வையம்பட்டியில் கார் ஒன்றில் அதிக அளவில் கள்ள நோட்டு கொண்டு செல்வதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சப் இன்ஸ்பெக்டர் தங்கசாமி தலைமையில் போலீசார் சம்மந்தப்பட்ட சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காரை பணத்துடன் பறிமுதல் செய்ததோடு காரில் வந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் காரில் பணம் கொண்டு வந்தது கோவை கேகே புதூரை சேர்ந்த பார்த்தசாரதி வயது 52, கணவாய் பகுதியை சேர்ந்த டிரைவர் சதீஷ் ஆகியோர் என்பதும் வையம்பட்டியில் செல் போன் கடை நடத்தி வரும் தங்கவேல் என்பவருக்கு கொண்டு வந்ததும் அவர் கடை முன்பு தான் போலீசார் பிடித்ததும் விசாரணை வெளிவந்துள்ளது. பிடிபட்ட பணம் அனைத்தும் கள்ள நோட்டு நோட்டு என்பதும் கேரளாவை சேர்ந்த ஒரு பட தயாரிப்பாளர் கொடுத்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது

  Next Story
  ×