search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதி
    X

    ஊட்டியில் தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதி

    • ஊட்டி-200-வது விழா மற்றும் கோடை விழா 2023 நடைபெற்று வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் தங்குகின்றனர்.

    ஊட்டி,

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் 1819-ம் ஆண்டு ஊட்டியை கண்டறிந்தார். இதையடுத்து தனது அயராத முயற்சியால் 1822-ம் ஆண்டு ஊட்டியை உருவாக்கி வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஊட்டி நகரம் மற்றும் ஏரி உருவாக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டராக ஜான் சல்லிவன் இருந்தார்.

    கோத்தகிரி கன்னேரி முக்கு பகுதியில் அவர் கட்டிய பங்களா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு நினைவகமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் ஊட்டி நகரம் உருவாகி 200-வது ஆண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டு மே மாதம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையொட்டி சுற்றுலாவை மேம்படுத்த வும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. கோடை சீசனையொட்டி இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பா டுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் ஏற்கனவே தொடங்கிய ரோஜா கண்காட்சியை ஒட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் நீலகிரி மாவட்டம் முழுவதும் அலைமோதியது. இதன் காரணமாக வார இறுதி நாட்களில் தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். ஒரு சிலர் சாலையோரம் மற்றும் பஸ் நிலையத்தில் தங்கினர்.

    இந்த நிலையில் ஊட்டி-200-வது விழா மற்றும் கோடை விழா 2023 முன்னிட்டு மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக ஊட்டி வெண்லாக் சாலையில் சிறப்பு சுற்றுலா மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சிறப்பு தகவல் மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வருகிற 31-ந் தேதி வரை செயல்படும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளின் காலியறைகள் குறித்த விவரம், புதிதாக அமைக்கப்பட்ட வாகன நிறுத்தும் இடங்கள் விவரம், வாகனங்கள் திருப்பி விடப்படும் வழித்தட விபர ங்கள் உள்பட பல்வேறு விவரங்களை நேரிலும் 0423-2443977 மற்றும் 8122643533 என்ற எண்ணி லும் தொடர்பு கொண்டு பெறலாம் என்றனர்.

    Next Story
    ×