search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் நகரி ெரயில் பாதை நிலம் எடுப்பு விசாரணை
    X

    திண்டிவனம் நகரி ெரயில் பாதை நிலம் எடுப்பு விசாரணை

    • கலெக்டர் தலைமையில் நடந்தது
    • விவசாயி குண்டுகட்டாக வெளியேற்றம்

    ஆரணி:

    திருவண்ணமலை மாவட்டம் ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் திண்டிவனம் நகரி இருப்பு பாதை திட்டம் நில எடுப்பு நடவடிக்கை விசாரணை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் உதவி கலெக்டர் தனலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் ஆரணி அருகே உள்ள இரும்பேடு கிராமத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திண்டிவனம், செய்யார், வந்தவாசி, ஆரணி, ஆற்காடு வழியாக நகரி வரையில் ெரயில்வே பாதை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு நில ஆர்ஜிதம் நடைபெற்றது.

    இதற்கு விவசாயிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் திண்டிவனம் நகரி வரையிலான ெரயில் பாதை நிலம் ஆர்ஜிதம் நில எடுப்பு ஆவண சரிபார்ப்பு செய்யபட்டது.

    அப்போது விவசாயி சங்கத்தை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் முறையிட்டு பேச முயன்றனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஒரு விவசாயியை குண்டு கட்டாக தூக்கி அப்புறபடுத்தி அலுவலகத்திற்கு வெளியில் விட்டு சென்றனர்.

    இதில் பங்கேற்ற 244 பேரிடமிருந்து நில எடுப்பு ஆவணம் சரிபார்த்து ரூ.40 கோடியே 83 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 20.81 ஹெக்டர் நிலத்தை ஆவணம் சரி பார்த்து நிலத்தை கையக படுத்தியுள்ளனர்.

    Next Story
    ×