என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேத்துப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கான வேளாண்மை தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்
வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூல் அதிகரிக்கலாம்
- விவசாயிகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை
- எராளமானோர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மைய மன்ற கூட்ட அரங்கில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப குழு கூட்டம் நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, தலைமை தாங்கினார். ஆத்மா குழு தலைவர் மணிமாறன், ஒன்றிய குழு துணை தலைவர் முருகையன், துணை வேளாண்மை அலுவலர் ஏழுமலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சேகர், வரவேற்றார்.
கூட்டத்தில் 22-23ம் ஆண்டிற்கான தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம், விவசாயிகளுக்கு பயிற்சி சுற்றுலா செயல் விளக்கங்கள், மத்திய மாநில அரசுகளின் வேளாண்மை மானிய திட்டங்கள், ஆகியவை பேசினார்கள்.
இதில் வேளாண்மை தொழில்நுட்பத் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, அதிகாரிகள் மற்றும் சேத்துப்பட்டு சுற்றுப்புற வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் ராஜாராம், நன்றி கூறினார்.