என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெள்ளூர் குஜால்பேட்டையில் பகுதி நேர ரேஷன் கடை
- அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த வெள்ளூர் குஜால்பேட்டை யில் நேற்று இப்பகுதியில் வசிக்கும் 223 குடும்ப அட்டைதாரர்கள் வசதிக்காக பகுதி நேர ரேசன் கடை தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவில் போளூர் தொகுதி அக்ரி. கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, ரேசன் கடையை திறந்து வைத்து ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்து பேசினார்.
இதில் முன்னாள் எம் எல் ஏ ஜெயசுதா, போளூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர்கள் செல்வன், ராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் கண்ணபிரான், ராஜாபாபு சந்தவாசல் முன்னாள் தலைவர் வெங்கடேசன் படவேடு முன்னாள் தலைவர் வெற்றிவேலன், சந்தவாசல் கிராம நிர்வாக அலுவலர் ஜோதிமுருகன, படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்னாள் அறங்காவலர் லோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் சந்தவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சசிகுமார் நன்றி கூறினார்.
Next Story






