என் மலர்
உள்ளூர் செய்திகள்

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
- வாகன நெரிசல் ஏற்பட்டதால் அவதி
- விரைவில் ஆடி மாத விழா தொடங்குகிறது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் நேற்று 3ம்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாய் வருகைதந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் வாகன நிறுத்துமிடத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
விரைவில் ஆடி மாத வெள்ளிக்கிழமை விழா துவங்கும் நிலையில், இப்போதே பக்தர்கள் குவிந்ததால் உரிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






