என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்த வேண்டும் - அா்ஜுன் சம்பத் வலியுறுத்தல்
  X

  இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் 

  விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்த வேண்டும் - அா்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்து மக்கள் கட்சி சாா்பில் 50,001 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
  • விஸ்வகா்மா என்ற திட்டத்தை பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்.

  திருப்பூர் :

  திருப்பூரில் இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

  விநாயகா் சதுா்த்தியையொட்டி, தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சாா்பில் 50,001 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. விநாயகா் சிலைகளை வைத்து வழிபடுவது என்பது வழிபாட்டு உரிமையுடன் தொடா்புடையதாகும். விநாயகா் சதுா்த்தி தினத்தை புராண நம்பிக்கைகளின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கத்தல்ல என்பதால் வாழ்த்து தெரிவிக்க மாட்டோம் என்று தற்போதைய அரசு தெரிவித்துள்ளது.

  பல இடங்களில் புதிதாக விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்ய காவல் துறையினா் அனுமதி அளித்துள்ளனா். விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவதற்கு கட்டுப்பாடு விதிப்பது கண்டிக்கத்தக்கது. விஸ்வகா்மா ெஜயந்தியையொட்டி, விஸ்வகா்மா என்ற திட்டத்தை பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா். இத்திட்டம் கைவினை கலைஞா்களுக்கு பெரும் அளவில் பயன் கொடுக்கக்கூடிய வகையில் உள்ளது.

  இந்த திட்டத்தை தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்த வேண்டும். ஆன்மிக சொற்பொழிவாளா் ஆா்.பி.வி.எஸ். மணியனை காவல் துறை நள்ளிரவில் கைது செய்துள்ளது. தவறாக எதுவும் பேசாத நிலையில் 80 வயதைக் கடந்த அவரைக் கைது செய்ததுடன், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. அவருக்கு சிறை நிா்வாகம் முழுமையான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பல பேருக்கு தொகை முழுமையாகச் சென்றடையவில்லை. இந்தத் திட்டத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்றாா்.

  Next Story
  ×