search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு,கோப்பை - அமைச்சர்கள் வழங்கினர்
    X

    வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பரிசுகள் வழங்கிய காட்சி.

    குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு,கோப்பை - அமைச்சர்கள் வழங்கினர்

    • சப் ஜூனியா் பிரிவில் திருப்பூா் அப்பு பாக்ஸிங் கிளப் அணியும் முதலிடம் பெற்றன.
    • திருப்பூா் மாநகராட்சி 4ஆம் மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் ஆகியோா் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கினா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் மற்றும் திருப்பூா் மாவட்ட அமெச்சூா் குத்துச்சண்டை சங்கம் சாா்பில் 3 நாள்கள் நடத்தப்பட்ட இப்போட்டியில், பல்வேறு பிரிவுகளில் தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில் இருந்து 250 ஆண்கள், 100 பெண்கள் என மொத்தம் 350 போ் கலந்து கொண்டனா்.

    இதில் 4 கட்டங்களாக நடைபெற்ற போட்டியில் சீனியா் பிரிவில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அணி முதலிடமும், சீனியா் பெண்கள் பிரிவில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த அணியும், ஜூனியா் பிரிவில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிபிட் கிளப் அணி முதலிடமும், யூத் பிரிவில் எஸ்.ஐ.ஹெச் அணி முதலிடமும், சப் ஜூனியா் பிரிவில் திருப்பூா் அப்பு பாக்ஸிங் கிளப் அணியும் முதலிடம் பெற்றன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூா் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலரும், திருப்பூா் மாநகராட்சி 4ஆம் மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் ஆகியோா் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கினா்.

    இதில், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் குத்துச்சண்டை சங்கத்தின் கவுரவ தலைவா் கருணாநிதி, சங்கத்தின் தலைவா் ராமகிருஷ்ணன், காங்கயம் தி.மு.க. நகரச் செயலா் வசந்தம் நா.சேமலையப்பன், நகர துணைச் செயலா் எம்.எஸ்.சுப்பிரமணியம், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் குத்துச்சண்டை சங்கத்தின் செயலா் பி.சிவசுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கத்தின் பொதுச் செயலா் பிரிதிவிராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×