என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  டெய்லர் கொலை: மனைவியுடனான தொடர்பை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்- கைதான டிரைவர் வாக்குமூலம்
  X

  டெய்லர் கொலை: மனைவியுடனான தொடர்பை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்- கைதான டிரைவர் வாக்குமூலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தனிப்படை போலீசார் ஜார்க்கண்டுக்கு விமானத்தில் சென்று உபேந்திராவை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.
  • போலீசார் உபேந்திராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருப்பூர்:

  ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் உபேந்திரா (வயது 50). இவரது மனைவி சித்ராதேவி (43). இவர்கள் 3 மகன்களுடன் திருப்பூர் நெசவாளர் காலனி திருமலை நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.உபேந்திரா அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். உபேந்திரா வீட்டுக்கு அருகே பீகார் மாநிலம் தாத்தோர் பகுதியை சேர்ந்த பவன் (27) என்பவர் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார்.

  உபேந்திரா தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி இரவு, தனது மனைவியுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகப்பட்டு பவனிடம் தகராறு செய்த உபேந்திரா அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். இதில் சிகிச்சை பலனின்றி பவன் இறந்தார்.

  இதுகுறித்து வடக்கு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து உபேந்திராவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உபேந்திரா ஜார்க்கண்டுக்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஜார்க்கண்டுக்கு விமானத்தில் சென்று உபேந்திராவை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.

  அவரிடம் நடத்திய விசாரணையில் பவனை கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இது குறித்து உபேந்திரா கூறுகையில், நான் வேலைக்கு செல்லும் நேரத்தில் பவன் எனது வீட்டிற்கு வந்து எனது மனைவியிடம் சிரித்து பேசி பழகியுள்ளார்.

  இதையறிந்த நான் பவன் மற்றும் மனைவியை கண்டித்தேன். இருப்பினும் பவன் தொடர்ந்துஎனது மனைவியுடன் பழகி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வந்த போது பவன் எனது வீட்டில் இருந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் பவனை வெட்டிக்கொலை செய்தேன் என்றார். தொடர்ந்து போலீசார் உபேந்திராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×