search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை பகுதியில் ஆந்திர நாவல்பழங்கள் விற்பனை
    X

    கோப்புபடம்

    உடுமலை பகுதியில் ஆந்திர நாவல்பழங்கள் விற்பனை

    • நாவல் பழம் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இ
    • தற்போது அங்கு சீசன் துவங்கி உள்ள நிலையில் ஜூலை வரை நீடிக்கும்.

    உடுமலை:

    ஆந்திர மாநிலத்தில் ஜம்பு எனப்படும் கலப்பு வகை நாவல் பழம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அங்கு சீசன் துவங்கி உள்ள நிலையில் ஜூலை வரை நீடிக்கும். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட இவ்வகை நாவல் பழம் உடுமலையில் தள்ளுவண்டி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கலப்பு வகை நாவல் பழம் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கிருஷ்ணகிரியில் இருந்து தருவிக்கப்படும் நாவல்பழம் கிலோ 320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பலரும் நாவல் பழங்களை ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர் என்றனர்.

    Next Story
    ×