search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொட்டியில் நீர் நிரப்பி, குழாய் இணைப்புகளுக்கு வழங்கி சோதனை - மேயர் நேரில் ஆய்வு
    X

    மேயர் தினேஷ்குமார் ஆய்வு பணியில் ஈடுபட்ட காட்சி. 

    தொட்டியில் நீர் நிரப்பி, குழாய் இணைப்புகளுக்கு வழங்கி சோதனை - மேயர் நேரில் ஆய்வு

    • 1,065 கோடி ரூபாய் செலவில் 4 வது குடிநீர் திட்டப்பணிகள் துவங்கி நடைபெற்று, நிறைவடையும் நிலையில் உள்ளது
    • முதல் கட்டமாக சுத்திகரிப்பு மையத்தில் தண்ணீர் சுத்திகரிப்புசெய்து, திருப்பூர் கொண்டு வரப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு அம்ரூத் திட்டத்தில் 4 வது குடிநீர் திட்டத்தின் கீழ் ,குடிநீர் வழங்கப்ப டவுள்ளது.இதற்காக 1,065 கோடி ரூபாய் செலவில் திட்டப்பணிகள் துவங்கி நடைபெற்று, நிறைவடையும் நிலையில் உள்ளது.இதில் முதல் கட்டமாக சுத்திகரிப்பு மையத்தில் தண்ணீர் சுத்திகரிப்புசெய்து, திருப்பூர் கொண்டு வரப்ப ட்டது. மாநகராட்சி வடக்கு பகுதியில் உள்ள மேல்நிலை த்தொட்டிகளுக்கு நீர் ஏற்றும் பணி நடைபெற்றது. அவ்வகையில் 2வது வார்டு கவிதா நகரில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் நீர் நிரப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டது.அதிலிருந்து லட்சுமியம்மாள் நகர், சோழன்நகர், ஜெய் கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு பதித்துள்ள குழாய் இணைப்புகளில் குடிநீர் வழங்கி முறையாக வருகிறதா என ஆய்வு நடந்தது.மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் ஆகியோர் அங்கு சென்று குடிநீர் சப்ளை சோதனை ஓட்ட த்தை ஆய்வு செய்தனர்.மேல்நிலைத் தொட்டி யிலிருந்து வீதிகளுக்கு செல்லும் வினியோக குழாய்கள், வீடுகளில் வழ ங்கியுள்ள இணைப்புகளில் குடிநீர் சப்ளை நிலை குறித்து அவர்கள் பார்வை யிட்டனர்.சோதனை யோட்டத்தின் போது, சப்ளை குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகள், குழாய் இணைப்புகளில் உள்ள சேதம் போன்ற வற்றால் குடிநீர் கசிந்து பல இடங்களில் வெளியேறியது.

    இது போன்ற உடைப்பு மற்றும் சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளை முறையாக பார்வையிட்டு அவற்றை உடனுக்குடன் சரி செய்து, குடிநீர் வீணாகாமல் வழங்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    Next Story
    ×